MSO 2026 Aptitude Formula Sheet Tamil PDF – 60+ Maths Formulas
MSO 2026 உளச்சார்புப் பரீட்சை – 60+ முக்கிய கணிதச் சூத்திரங்கள் | தமிழ் PDFUpdated 1 Nov 2026Competitive Exams · Formula Sheet · IQ · MSO 2026 · MSO Exam · MSO, உளச்சார்பு, மாதிரி வினாத்தாள், தரவு விளக்கம் · Study Notes · Tamil Study Guide
தமிழில் படிக்க ↓PDF downloads ↓
MSO 2026 Aptitude Test – Key Maths Formulas
For candidates preparing for the 2026 Management Service Officer (MSO) competitive examination, Mindgrid provides a Tamil PDF guide with 60+ key maths formulas.
This guide brings together the basic formulas, quick calculation methods and examples needed to solve the Mathematical Aptitude questions of the aptitude test quickly and accurately.
This PDF is useful for revising key maths formulas in the days before the exam.
What's in this PDF guide
Formulas for 13 key maths sections:
- Percentage
- Ratio
- Average
- Profit and Loss
- Simple and Compound Interest
- Time and Work
- Time, Speed and Distance
- Numbers and Index Laws
- Area and Perimeter
- Age Problems
- Fractions and Percentage Conversions
- Squares from 1 to 30
- Cubes from 1 to 15
Key maths formulas
Some basic formulas needed to solve arithmetic questions in the exam are given below.
Percentage:
- x percent of y = (x × y) ÷ 100
- Rate of increase = (New value − Old value) ÷ Old value × 100
Average:
- Average = Total sum ÷ Number of items
Profit and Loss:
- Profit = Selling price − Cost price
- Profit rate = Profit ÷ Cost price × 100
Time and Work:
- If A can finish a job in a days and B in b days, the days taken together = (a × b) ÷ (a + b)
Time, Speed and Distance:
- Distance = Speed × Time
- Speed = Distance ÷ Time
- Time = Distance ÷ Speed
Many more key formulas are included in the PDF guide.
Quick calculation methods
Knowing quick calculation methods is important for saving time in competitive exams.
Some of the methods in this PDF:
- To find 10% – move the decimal point of the number one place to the left.
- To find 5% – take half of 10%.
- To find 25% – divide the number by 4.
- To find 20% – divide the number by 5.
- To find 12.5% – divide the number by 8.
- To multiply by 99 – multiply the number by 100, then subtract the same number from it.
Example:
What is 15% of 640?
10% = 64
5% = 32
15% = 64 + 32 = 96
Answer: 96
How to use this guide
- First understand the basic formulas in each maths section.
- Try solving some sample questions using the formulas.
- Memorise the tables for fractions, percentages, squares and cubes.
- Practise using the quick calculation methods.
- Use this PDF for a quick revision before the exam.
Important note: As well as memorising formulas, it is essential to practise how to use them in questions.
PDF details
- Prepared by: Mindgrid
- Exam: MSO 2026
- Language: Tamil
- Type: Mathematical Aptitude Formula Sheet
- Total pages: 6
- Maths sections: 13
- Formulas: 60+
- File format: PDF
- Print-ready format: A4
Download this guide for free and use it for your exam revision.
Get more MSO 2026 practice resources
Keep visiting the Mindgrid website and Facebook page for aptitude questions, model papers, past papers and Tamil guides for the MSO 2026 competitive examination.
Follow the Mindgrid Facebook page
Mindgrid – Tamil guides for competitive exams.
தமிழில்
MSO 2026 உளச்சார்புப் பரீட்சை – முக்கிய கணிதச் சூத்திரங்கள்
2026 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) போட்டிப் பரீட்சைக்குத் தயாராகும் பரீட்சார்த்திகளுக்காக, 60+ முக்கிய கணிதச் சூத்திரங்கள் அடங்கிய தமிழ் PDF வழிகாட்டியை Mindgrid வழங்குகிறது.
உளச்சார்புப் பரீட்சையின் எண்கணிதத் திறன் (Mathematical Aptitude) வினாக்களை விரைவாகவும் துல்லியமாகவும் தீர்ப்பதற்குத் தேவையான அடிப்படைச் சூத்திரங்கள், விரைவுக் கணக்கீட்டு முறைகள் மற்றும் உதாரணங்கள் இந்த வழிகாட்டியில் தொகுக்கப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு முன்னைய நாட்களில் முக்கிய கணிதச் சூத்திரங்களை மீள்பார்வை செய்வதற்கு இந்த PDF பயனுள்ளதாக அமையும்.
இந்த PDF வழிகாட்டியில் உள்ளவை
13 முக்கிய கணிதப் பிரிவுகளுக்கான சூத்திரங்கள்:
- சதவீதம் (Percentage)
- விகிதம் (Ratio)
- சராசரி (Average)
- இலாபமும் நட்டமும் (Profit and Loss)
- தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி (Simple and Compound Interest)
- காலமும் வேலையும் (Time and Work)
- காலம், தூரம், வேகம் (Time, Speed and Distance)
- எண்கள் மற்றும் அடுக்கு விதிகள் (Numbers)
- பரப்பளவும் சுற்றளவும் (Area and Perimeter)
- வயது கணக்குகள் (Age Problems)
- பின்னம் மற்றும் சதவீத மாற்றங்கள்
- வர்க்கங்கள் 1 முதல் 30 வரை
- கனங்கள் 1 முதல் 15 வரை
முக்கிய கணிதச் சூத்திரங்கள்
பரீட்சையில் எண்கணித வினாக்களைத் தீர்ப்பதற்குத் தேவையான சில அடிப்படைச் சூத்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
சதவீதம்:
- y இன் x சதவீதம் = (x × y) ÷ 100
- அதிகரிப்பு வீதம் = (புதிய மதிப்பு − பழைய மதிப்பு) ÷ பழைய மதிப்பு × 100
சராசரி:
- சராசரி = மொத்தக் கூட்டுத்தொகை ÷ எண்ணிக்கை
இலாபமும் நட்டமும்:
- இலாபம் = விற்பனை விலை − கொள்முதல் விலை
- இலாப வீதம் = இலாபம் ÷ கொள்முதல் விலை × 100
காலமும் வேலையும்:
- A ஒருவர் a நாட்களிலும், B ஒருவர் b நாட்களிலும் ஒரு வேலையை முடிப்பார்களாயின், இருவரும் சேர்ந்து முடிக்கும் நாட்கள் = (a × b) ÷ (a + b)
காலம், தூரம், வேகம்:
- தூரம் = வேகம் × காலம்
- வேகம் = தூரம் ÷ காலம்
- காலம் = தூரம் ÷ வேகம்
மேலும் பல முக்கிய சூத்திரங்கள் PDF வழிகாட்டியில் இடம்பெற்றுள்ளன.
விரைவுக் கணக்கீட்டு முறைகள்
போட்டிப் பரீட்சைகளில் நேரத்தைச் சேமிப்பதற்கு விரைவுக் கணக்கீட்டு முறைகளை அறிந்திருப்பது முக்கியமாகும்.
இந்த PDF இல் உள்ள சில முறைகள்:
- 10% கண்டறிய – எண்ணின் தசமப் புள்ளியை ஒரு இடம் இடப்புறம் நகர்த்தவும்.
- 5% கண்டறிய – 10% இன் அரைவாசியைக் காணவும்.
- 25% கண்டறிய – எண்ணை 4 ஆல் வகுக்கவும்.
- 20% கண்டறிய – எண்ணை 5 ஆல் வகுக்கவும்.
- 12.5% கண்டறிய – எண்ணை 8 ஆல் வகுக்கவும்.
- 99 ஆல் பெருக்க – எண்ணை 100 ஆல் பெருக்கி, அதிலிருந்து அதே எண்ணைக் கழிக்கவும்.
உதாரணம்:
640 இன் 15% என்ன?
10% = 64
5% = 32
15% = 64 + 32 = 96
விடை: 96
இந்த வழிகாட்டியை எவ்வாறு பயன்படுத்துவது?
- முதலில் ஒவ்வொரு கணிதப் பிரிவிலும் உள்ள அடிப்படைச் சூத்திரங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
- சூத்திரங்களைப் பயன்படுத்தி சில மாதிரி வினாக்களைத் தீர்க்க முயற்சியுங்கள்.
- பின்னம், சதவீதம், வர்க்கங்கள் மற்றும் கனங்கள் தொடர்பான அட்டவணைகளை மனப்பாடம் செய்யுங்கள்.
- விரைவுக் கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி செய்யுங்கள்.
- பரீட்சைக்கு முன்னர் இந்த PDF ஐ விரைவான மீள்பார்வைக்காகப் பயன்படுத்துங்கள்.
முக்கிய குறிப்பு: சூத்திரங்களை மனப்பாடம் செய்வதுடன், அவற்றை வினாக்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் பயிற்சி செய்வது அவசியமாகும்.
PDF விபரங்கள்
- தயாரிப்பு: Mindgrid
- பரீட்சை: MSO 2026
- மொழி: தமிழ்
- வகை: Mathematical Aptitude Formula Sheet
- மொத்தப் பக்கங்கள்: 6
- கணிதப் பிரிவுகள்: 13
- சூத்திரங்கள்: 60+
- கோப்பு வடிவம்: PDF
- அச்சிடுவதற்கு ஏற்ற வடிவம்: A4
இந்த வழிகாட்டியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, பரீட்சைக்கான மீள்பார்வையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் MSO 2026 பயிற்சி வளங்களைப் பெற
MSO 2026 போட்டிப் பரீட்சைக்கான உளச்சார்பு வினாக்கள், மாதிரி வினாத்தாள்கள், கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் தமிழ் வழிகாட்டிகளைப் பெற Mindgrid இணையத்தளத்தையும் Facebook பக்கத்தையும் தொடர்ந்து பார்வையிடுங்கள்.
Mindgrid Facebook பக்கத்தைப் பின்தொடருங்கள்
Mindgrid – போட்டிப் பரீட்சைகளுக்கான தமிழ் வழிகாட்டிகள்.
PDF document
555 KB · 402 downloads
- Download
Mindgrid MSO2026 Formula Sheet
PDF · 555 KB