இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு – திருத்தம் இல. 05 வெளியீடு 2026 (கல்வி இளமாணி பட்டதாரிக்கான வரைவிலக்கணம்)
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுPublished 6 Oct 2026
இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் திருத்தம் இல. 05, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி இல. 2507/02 (21.09.2026) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
- வர்த்தமானி இலக்கம்: 2507/02
- வெளியான திகதி: 21.09.2026
- கையொப்பமிட்ட திகதி: 14.09.2026
- வெளியிட்டது: அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டளைப்படி, கல்வி அமைச்சின் செயலாளர்
பின்னணி
2014.10.23 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி இல. 1885/38 இல் வெளியான இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு, இதுவரை நான்கு தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏனைய விதிகளும் நிபந்தனைகளும் மாற்றமின்றித் தொடரும்.
- திருத்தம் இல. 01 – வர்த்தமானி 2120/2 (22.04.2019)
- திருத்தம் இல. 02 – வர்த்தமானி 2255/14 (24.11.2021)
- திருத்தம் இல. 03 – வர்த்தமானி 2444/21 (08.07.2025)
- திருத்தம் இல. 04 – வர்த்தமானி 2493/61 (19.06.2026)
திருத்தம் இல. 05 – என்ன மாற்றம்?
சேவைப் பிரமாணக் குறிப்பின் 13.8 ஆம் பிரிவில் "கல்வி இளமாணி பட்டதாரி" (Bachelor of Education Graduate) என்பதற்குப் புதிய வரைவிலக்கணம் சேர்க்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம், அல்லது பாராளுமன்ற விசேட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட B.Ed பட்டம், பின்வரும் நான்கு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே "கல்வி இளமாணி பட்டதாரி" எனக் கருதப்படும்.
- 04 வருட முழுநேர, நேரடி (ஒன்லைன் அல்லாத) பட்டக் கற்கைநெறியாக இருத்தல்.
- பட்டக் கற்கைநெறியில் குறைந்தது 120 வரவுகள் (credits) பூர்த்தி செய்யப்பட்டிருத்தல்.
- அரசாங்க தேசிய / மாகாணப் பாடசாலை அல்லது அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலையொன்றில், தகைமையுள்ள மேற்பார்வையாளர் / மேற்பார்வைக் குழுவின் கீழ் குறைந்தது 10 வார கற்பித்தல் பயிற்சி பூர்த்தி செய்யப்பட்டிருத்தல்.
- பட்டக் கற்கைநெறியினுள் குறைந்தது 06 வரவுகள் கொண்ட ஆய்வுக் கட்டுரை / அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டிருத்தல்.
யாருக்கு முக்கியம்?
- ஆசிரியர் சேவைக்கு B.Ed தகைமையுடன் விண்ணப்பிக்கத் தயாராகுவோர்
- தற்போது B.Ed கற்கும் மாணவர்கள் — உங்கள் கற்கைநெறி மேற்படி 4 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கின்றதா எனச் சரிபார்க்கவும்
- ஒன்லைன் / பகுதிநேர B.Ed கற்கைநெறிகளில் பயில்வோர் — இவை புதிய வரைவிலக்கணத்தின் கீழ் உள்ளடங்காமல் போகலாம்
இது வர்த்தமானியின் சுருக்கம் மட்டுமே. முழு விவரங்களுக்கு கீழே உள்ள உத்தியோகபூர்வ வர்த்தமானி PDF ஐ வாசிக்கவும்.
3 PDF files
710 KB total